காதலருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா?

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (14:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய புகழைப் பெற்றவர் ஓவியா தான் என்பதும் ஓவியா அளவுக்கு இதுவரை யாரும் புகழ் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது, ஆனால் அந்த புகழை அவர் சினிமாவில் பயன்படுத்தினாரா என்பது கேள்விக்குறியே 
 
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஓவியா இருந்தபோது ஆரவ்வை காதலித்ததாகவும் அந்த காதலில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் அவர் இடையில் வெளியேறியதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் அவருடனான காதலை மறந்து விட்டதாகவும் டுவிட் ஒன்றை ஓவியா பதிவு செய்தார் என்பதும் ஆரவ்வுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகை ஓவியா தனது டுவிட்டரில் சற்றுமுன் ஒரு ட்வீட்டை பதிவு செய்து அதில் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அப்படி எனில் இவர்தான் ஓவியாவின் காதலரா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர் இதற்கு ஓவியா என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்