உதவி இயக்குனரின் காதலை காப்பாற்றும் கொரியன் படம்

Webdunia
சனி, 22 நவம்பர் 2014 (10:07 IST)
ஒரு கொரியன் படம். இது மலையாளத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் பெயர்.
தமிழைப் போலவே, சரியாகச் சொன்னால் தமிழைவிட அதிகம் மலையாளத்தில்தான் பிற படங்களை குறிப்பாக கொரியன் படங்களை காப்பி அடிக்கிறார்கள். காப்பி என்று தெரியாத அளவுக்கு அடிப்பதில் மலையாளிகள் டாக்டரேட் வாங்கியவர்கள்.
 
இந்த ட்ரெண்டை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டதுதான், ஒரு கொரியன் படம்.
 
உதவி இயக்குனராக இருக்கும் இளைஞன் அழகான பெண்ணொருத்தியை காதலிக்கிறான். அதற்கு காதலியின் வீட்டிலுள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். படம் இயக்கி தன்னை நிரூபித்தால் மட்டுமே காதல் கைகூடும் என்ற நிலையில் அந்நிய ஆள் தரும் ஒரு சூப்பர் ஸ்கிரிப்டை படமாக்கி ஜெயித்தும் விடுகிறான். பிறகுதான் தெரிகிறது, அது ஒரு கொரிய படத்தின் அப்பட்ட காப்பி என்பது. 
 
படம் சுமாராகதான் போகிறது. ஆனாலும், மலையாள சினிமாவின் கொரிய காப்பிகளை உரசிப் பார்ப்பதால் படத்துக்கு விளம்பர வெளிச்சம் கிடைத்திருக்கிறது.