இதனாலேயே அவர்களை கவரும் வகையில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் நடித்த டான், ப்ரின்ஸ், மாவீரன், அயலான் போன்ற திரைப்படங்கள் எல்லாம் அந்த வகையில் எஸ்.கே நடித்த திரைப்படங்கள்தான்.
இந்த நிலையில் அடுத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். எஸ்.கேவின் மற்ற படங்கள் போல் அல்லாமல் முழுக்க முழுக்க இது சீரியஸான திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருடன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிவகார்த்திகேயன் வந்திருந்தார். அதில் நடிகை வடிவுகரசியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, ”இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.
ஒவ்வொரு காட்சியையும் எனக்கு மிகவும் பிடித்தே நடித்திருக்கிறேன். சீக்கிரத்தில் சிவகார்த்திகேயனுடனும் நடிப்பேன் என நம்புகிறேன்” எனக் கூறிய வடிவுகரசி. “இப்படி பலமுறை கூறிவிட்டேன். ஆனால் இப்போது வரை என்னை சிவகார்த்திகேயன் நடிக்க வைக்கவே இல்லை. இதற்கு மேலும் வாய்ப்பு தரவில்லை என்றால் அவர் கம்பெனியில் சேர்ந்துவிட போகிறேன்” எனக் கூறினார் வடிவுகரசி.