''ஜெயிலர்'' படத்தில் ஆர்.சி.பி காட்சிகளை நீக்க உத்தரவு

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (18:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான  திரைப்படம் ’ஜெயிலர்’. இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து, மோகன்லால், சிவராஜ்குமார் ஆகிய சூப்பர் ஸ்டார்களும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில்  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இந்த  படம் வெளியாகி இதுவரை 525+ கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  தற்போது ரூ.600 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் ஜெயிலர் படக்குழுவினர், ஆன்மிக சுற்றுப் பயணம் முடித்து வந்த ரஜினிகாந்தோடு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில்,  ஜெயிலர் படத்தில் ஐபிஎல் அணியான பெங்களூரு அணி ஜெர்சியைப் பயன்படுத்தப்பட்டது.

இதில், ஜெயிலர் படத்தில் ரவுடிகளாக நடித்தவர்கள் ஆ.சி.பி அணி ஜெர்சியை அணிந்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  வழக்குத் தொடரப்பட்டது.

இந்த  நிலையில், ஜெயிலர் படத்தில் ஐபிஎல் பெங்களுரு அணி ஜெர்சியை பயன்படுத்தியது  தொடர்பான காட்சிகளை நீக்கி வரும் செம்டம்பர் 1 முதல் திரையிட டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்