விருதுக்கு ஆசைப்படும் நம்பர் நடிகை?

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2017 (18:25 IST)
கதைநாயகிக்கு முக்கியவத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நம்பர் நடிகை விருது வாங்க முனைப்பில் உள்ளாராம். இதனால் சொந்த குரலில் பேசியே தீருவேன் என அடம்பிடித்து வருகிறாராம்.


 

 
தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாகவே குப்பை கொட்டுவது என்பது, ஏழு மலை ஏழு கடல் தாண்டி அதிசயப்பூவைக் கொண்டு வருகிற விஷயம். ஆனால், அதையெல்லாம் அசால்ட்டாகத் தாண்டிவிட்டார் பெரிய நம்பர் நடிகை.
 
அடுத்தகட்ட வளர்ச்சியாக, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார். இந்நிலையில், விருது வாங்கும் ஆசையும் நடிகைக்கு ஏற்பட்டிருக்கிறதாம். அதனால், சொந்தக்குரலில் டப்பிங் பேசியே தீருவேன் என்று அடம்பிடிக்கிறாராம். சமீபத்தில் நடிகையே டப்பிங் பேசிய படம் ஊத்திக் கொண்டதால், மற்ற படங்களின் இயக்குநர்கள் தயங்குகிறார்களாம்.
அடுத்த கட்டுரையில்