ஸ்ருதி ஹாசனை பகிரங்கமாகக் கலாய்த்த வடஇந்திய மீடியாக்கள்

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (13:10 IST)
வடஇந்தியாவில் உள்ள மீடியாக்கள், ஸ்ருதி ஹாசனைப் பயங்கரமாகக் கலாய்த்து எழுதியுள்ளன.




தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஆனால், அவர் கையில் தற்போது ஒரே ஒரு படம் மட்டும்தான் உள்ளது. அதுவும், அவருடைய தந்தையான கமல் இயக்கி, நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’. அந்தப் படம் எப்போது ஷூட்டிங் போவார்கள் என்று தெரியவில்லை. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

வேறெந்த பட வாய்ப்பும் வராததற்கு காரணம், இந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாகப் போகாததுதான் என்கிறார்கள். அதிலும், குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘பெஹன் கோஹி டெரி’ படத்தில், அவருடைய நடிப்பு மிக மோசமாக இருந்ததாக பாலிவுட் பத்திரிகைகள் விமர்சித்துள்ளன. ‘வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர் போல இருக்கிறார் ஸ்ருதி’ என்று ஒரு பத்திரிகை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளதாம்.
 
அடுத்த கட்டுரையில்