காலா படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த் படப்பிடிப்பின் இடையில் தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் ரஜினி தனது கட்சி பெயர் குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
காலா படத்தை தொடங்கும் முன்னர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக சில கருத்துக்களை கூறினார். அதன் பின்னர் பல பத்திரிகை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்களை சந்தித்து ஆலோசித்தார்.
இதனையடுத்து காலா படத்தில் பிசியான ரஜினிகாந்த் ஓய்வு நேரங்களில் பலரையும் சந்தித்து அரசியல் குறித்து ஆலோசித்து வருகிறார். ரஜினிகாந்த் தனிக்கட்சி தான் தொடங்க இருப்பதாகவும், அதன் பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் ரஜினிகாந்த் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் குறித்து சில தகவல்கள் லீக்காகி உள்ளன. ரஜினி தான் ஆரம்பிக்க உள்ள கட்சியின் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது ரஜினியின் வீட்டில் தான் இந்த ஆலோசனைகள் படு பிசியாக நடந்து வருகிறதாம்.