பஞ்ச் டயலாக் வேண்டாமென மறுத்த விஜய் சேதுபதி

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (11:56 IST)
தன்னுடைய படத்தில் எந்த பஞ்ச் டயலாக்கும் வேண்டாமென மறுத்துள்ளார் விஜய் சேதுபதி.
 

 


பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘கருப்பன்’. ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில், மாடு பிடிக்கும் வீரனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். இந்தப் படத்தில், எந்தவிதமான பஞ்ச் டயலாக்கும் இருக்கக் கூடாது என கதை கேட்கும்போதே சொல்லிவிட்டாராம் விஜய் சேதுபதி. ஆனால், அவர் சாதாரணமாகச் சொல்லும் டயலாக்கே மேஜிக்காக இருக்கும் என்கிறார் இயக்குநர். விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டதற்காகத்தான் இந்தப் படத்தில் நடிக்கவே சம்மதித்தாராம் பாபி சிம்ஹா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்