பத்மாவதி' படத்திற்கு தடையில்லை: மேற்குவங்க முதல்வர் அறிவிப்பு

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (05:03 IST)
பாஜக என்ன செய்தாலும் அதை கடுமையாக எதிர்த்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, 'பத்மாவதி' படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவினர்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அந்த படத்தை மேற்குவங்க மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிட எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளார்

தீபிகா படுகோனே நடிப்பில் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கிய சரித்திர படமான 'பத்மாவதி' படத்திற்கு ஐந்து மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இதனால் வரும் டிசம்பர் 1ஆம் தேதி அந்த படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்லா முக்கிய மாநிலங்களான குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் தடையால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பத்மாவதியை மேற்கு வங்க மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தமது அரசு தயாராக இருப்பதாக மம்தா கூறியுள்ளது படக்குழுவினர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்