கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்குப் பதில் இந்த நடிகரா?

vinoth
புதன், 27 மார்ச் 2024 (06:59 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பல படங்களில் நடித்து வரும் அவரால் தொடர்ச்சியாக இந்த படத்துக்காக தேதிகள் ஒதுக்க முடியாததால் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் சிம்பு இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதெ போல மற்றொரு நடிகரான ஜெயம் ரவியும் விலகியுள்ளதால் அவருக்கு பதில் அரவிந்த் சாமி அல்லது நிவின் பாலி ஆகிய இருவரில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் தற்போது மணிரத்னம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்