இவங்களும் இப்படியா? ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட நிவேதா தாமஸ்.!

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (14:50 IST)
நடிகை நிவேதா தாமஸ் குழந்தை நட்சத்திரமான சன் டிவியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். 


 
பிறகு தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த இவர், விஜய் நடித்த குருவி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  பிறகு சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.
 
இளமையான நடிகையாக தமிழ் , தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் ரவுண்டு அடுத்துவரும் இவர்  தற்போது உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வரும் நிவேதா தாமஸ்  கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Progress. #itsallthatreallymatters

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்