எம்.எஸ் தோனி தயாரிப்பில் ஹரீஸ் கல்யாண் இவானா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி சமீபத்தில் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, எல்ஜிஎம் (LetsGetMarried) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இது இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அதில், லெட்ஸ் ஜெட் மேரிட் படத்தின் முதல் சிங்கில் #Salana பாடல் வரும் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.