'மின்னள் முரளி' வீட்டில் புதிய 'குட்டிதேவதை' வருகை....ரசிகர்கள் வாழ்த்து

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (23:07 IST)
மலையாள சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனராக பாசில் ஜோசிப் – எலிசபெத் தம்பதியினருக்கு இன்று குழந்தை பிற்ந்துள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் பாசில் ஜோசப்.  குஞ்சி ராமாயணம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக றிமுகம் ஆனார்.

இதன்பின்னர், இவர் இயக்கிய கோதா, மின்னல் முரளி என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்தாண்டு விபின் தாஸ் இயக்கத்தில் இவர் நடித்த ஜெய ஜெய ஜெய ஜெய ஹே  படம் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில், பாசில் ஜோசப்- எலிசபெத் தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாவில், எங்கள் வீட்டின் புதிய வரவாக குட்டி தேவை வந்துள்ளார். அவரது வளர்ச்சியை காணவுள்ளோம். தினமும் கற்றுக் கொள்வோம்’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்