ரஜினி நெல்சன் படத்தின் லுக் டெஸ்ட் நடந்ததா? ஆச்சர்யத் தகவல்!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (09:30 IST)
ரஜினி அடுத்ததாக நெல்சன் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லபடுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.

வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கிய நெல்சன் அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் 6 ஆண்டுகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். அதன்பின்னர் அவர் இயக்கிய கோலமாவு கோகிலா படம் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது டாக்டர் மற்றும் பீஸ்ட் என உச்சநடிகர்களை இயக்கி முன்னணி இயக்குனராகியுள்ளார்.

இந்நிலையில் அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினி அடுத்து நடிக்கப்போகும் படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் நெல்சனின் பெயரும் உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ரஜினி கூட நெல்சன் இயக்கத்தில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் பணிகளுக்கு இடையே ரஜினி படத்துக்கான கதையை நெல்சன் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அதை ரஜினியிடம் சொல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன் தினம் ரகசியமாக இந்த படத்தில் ரஜினியின் லுக் டெஸ்ட் சம்மந்தமான போட்டோஷூட்டை நெல்சன் ரஜினியை வைத்து எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்