கோட் சூட் போட்ட சிவகார்த்திகேயனை மடக்கி மடக்கி கலாய்த்த இயக்குனர்!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (15:21 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் சூட் போட்டுகொண்டு இடுப்பில் ஸ்டைலாக கை வைத்து கெத்தாக போஸ் கொடுத்த  போட்டோவை வெளியிட்டு " போற போக்குல ஒரு போட்டோ ஷூட்" என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் " போறபோக்குல பண்ணினத்துக்கே இப்புடின்னா... அப்போ பிளான் பண்ணி பண்ணியிருந்தா வேற மாதிரி இருக்கும் போலயே... ஸ்டைலா இருக்கீங்க" என வஞ்சப்புகழ்ச்சி  பாணியில் கலாய்த்து கமெண்ட் அடித்திருந்தார்.

நெல்சனின் அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்,  " கமெண்ட் போட்டோமா ரெண்டு கலாய் கலாச்சோமான்னு கடைய சாத்திட்டு போய் காஃபி தண்ணி குடிச்சோமான்னு இருங்க இயக்குனரே.  இன்ஸ்டாவுலே சுத்திகிட்டு திரிய கூடாது" என கிண்டலாக ரிப்ளை செய்தார்.  அதற்கும் விடுவேனான்னு பதிலளித்த நெல்சன் "யாரு நாங்க?? தம்பி போங்க தம்பி, நீங்க போஸ்ட் போட்டா கமெண்ட் போட தான் இன்ஸ்டால சுத்திக்கிட்டு இருக்கோம்.. என்னைப்போய் தப்பா பேசுறீங்களே.." என்றார்.

உடனே சிவா "ஐயா என்னய்யா கூடக்கூட பேசுறீங்க.. எல்லாத்துக்கும் பதில் வெச்சிருக்காரு நம்ம வேற ஆள பார்ப்போம்". என நெல்சனிடம் இருந்து நைசா நழுவி சென்றார். இவர்களின் இந்த கம்மெண்ட்ஸ்களுக்கு லைக்ஸ் பிச்சிகிட்டு இன்க்ரீஸ் ஆகி வருகிறது. இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Again porapokkula oru photo shoot Photo credits : @navneth85

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்