பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக அறியப்படும் நீல் நிதின் முகேஷ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க இவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதையடுத்து ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில் இவர் தான் அமெரிக்காவில் விமானநிலையத்தில் அதிகாரிகளால் சிறைப்படுத்தப் பட்டதாகக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
அவரது பாஸ்போர்ட்டை சோதனையிட்ட அதிகாரிகள் நிதின் பார்ப்பதற்கு இந்தியர் போல இல்லை என்று சொல்லி, அவர் போலீஸ் பாஸ்போர்ட்டில் அமெரிக்காவில் நுழைந்ததாக குற்றம்சாட்டி அவரை நான்கு மணிநேரம் சிறைப்படுத்தி விசாரித்துள்ளனர். பின்னர் தான் ஒரு நடிகர் என்றும் தன்னைப் பற்றி கூகுளில் தேடினால் தெரிந்துகொள்ளலாம் என அவர் சொன்ன பிறகே அவரைப் பற்றி தெரிந்து விடுவித்துள்ளனர்.