நயன்தாரா குழந்தை பெற்றது சட்டவிரோத செயலா? – வைரலாகும் விவாதம்!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (08:25 IST)
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிகள் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்ததுடன், புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டிருந்தார். சமீபத்தில்தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது என்றாலும், நயன்தாரா கர்ப்பமாகவும் இல்லை. இதனால் இவர்கள் வாடகைத்தாய் (Surrogacy) முறையில் குழந்தையை பெற்றெடுத்திருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

ALSO READ: ஒரே ஒரு லவ்.. அதுக்கு வேர்ல்ட் வாரே வந்துடும்போல.. சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ டிரைலர்

இதுகுறித்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா தரப்பில் உறுதியான விளக்கம் அளிக்கப்படவில்லை. பலர் இதற்காக அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வரும் அதேசமயம், அவர்கள் செய்தது தவறு என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது.

அவர்களது இந்த பதிவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, இந்தியாவில் உடல்நல குறைவுக்காக அன்றி மற்றபடி வாடகைத்தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் செய்தது சட்டத்திற்கு புறம்பானதா என்பது சில நாட்களில் தெரிய வரும் என்றும் பேசியுள்ளார்.

அதேசமயம் பலர் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெறுவதை ஆதரித்து நயன்தாரா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்