100 கோடி கிளப்பில் இணைந்த சூப்பர் ஸ்டாரின் ''கார்ஃபாதர்'' !

சனி, 8 அக்டோபர் 2022 (14:58 IST)
சூப்பர் ஸ்டார் சிஞ்சீவி நடிப்பில்  உருவாகி வரும் காட்பாதர் பட    ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படம் தெலுங்கில் ‘’காட்பாதர்’என்ற பெயரில் ரீமேக்காக உருவானது. இப்படத்தில் சிறப்பு வேடத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார்.

அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி இப்படம்    மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன்  வெளியானது.

இப்படத்திற்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் ஆர்பி சவுத்ரி மற்றும் என்,வி.பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வெளியான நாளில் இன்றுவரை, உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.


ALSO READ: சூப்பர் ஸ்டாரின் ''காட்பாதர் ''டிரைலர் ரிலீஸ்....இணையதளத்தில் வைரல்
 
ஆச்சார்யா படத்தின் தோல்விக்குப் பின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீசியின் காட்பாதர் படம் வெற்றி பெற்றதுடன் வசூலையும் குவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Sinoj

#GodFather ENTERS ₹100 cr club at the WW Box Office.

— Manobala Vijayabalan (@ManobalaV) October 8, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்