வெப் சீரிஸில் நடிக்க மறுத்த லேடி சூப்பர் ஸ்டார்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:45 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பல வருடங்களாக நீடித்து வருகிறார். அவரின் படங்கள் தமிழில் பல கோடி ரூபாய் வரை வசுலித்து வருவதால் தமிழில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான அவரின் மூக்குத்தி அம்மன் திரைப்பட வெற்றியும் பிறந்தநாள் கொண்டாட்டமும் அவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன. ஆரம்ப காலங்களில் கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து வந்த நயன்தாரா இப்போது எல்லாம் தன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.

இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் பெரும்தொகை கொடுக்க சம்மதித்தும் நயன்தாரா அந்த வாய்ப்பை மறுத்துள்ளாராம். அதற்குக் காரணம் கவர்ச்சிகரமான வேடத்தில் நடிக்க வேண்டும் என அவர்கள் அனுகியதுதானாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்