அட்ஜஸ்மெண்ட்டுக்கு நயன்தாரா தயாராம்: ஆத்தாடி போச்சா.. கலக்கத்தில் சக நடிகைகள்!!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (12:02 IST)
நயன்தாரா தனது செக்கண்ட் இன்னிங்ஸில் கொடி கட்டி பறக்கிறார் என மேலோட்டமாக பேசிக்கொண்டாலும், உண்மை நிலவரமே வேறு என நெருங்கிய வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.


 
 
மாயா படத்தால் ஏறிய மார்க்கெட்டை டோரா படத்தில் மொத்தமாக கோட்டை விட்டார் நயன்தாரா. ஆனாலும், தனது பில்டப் குறையாமல் ஹிரோயின் சப்ஜெக்ட் படங்களில் தான் நடிப்பேன், பெரிய ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி டூயட் பாட முடியாது என தெரிவித்து வந்தார்.
 
ஆனால், உண்மை நிலவரம் என்னவெனில் டோரா பட தோல்வியால் தனது அடுத்தப்படத்தை வெளியிட முடியாமல் தவிக்கிறாராம் நயன்தாரா.
 
இதனால் வேறு வழியின்றி தனது பிடிவாதங்களை தளர்த்தி அட்ஜஸ்ட் பண்ண சம்மதித்துவிடாராம். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கவும் சம்மதித்துவிட்டார். மேலும், பட விழாக்களிலும் ப்ரமோஷ்ன்களிலும் பங்கேற்பார் எனவும் தெரிகிறது.
 
இதனால் நயன்தாராவின் அட்ஜஸ்மெண்ட் குறைகளை வைத்து தங்களுக்கு பில்டப் கொடுத்த நடிகைகள் எல்லாம் கலக்கத்தில் உள்ளதாக பேசப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்