தாங்க முடியலடா சாமி… புத்தம் புது காலை படத்தை விமர்சித்த நட்டி!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (10:38 IST)
பிரபல ஒளிப்பதிவு இயக்குனரும் நடிகருமான நட்டி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள புத்தம் புதுகாலை திரைப்படத்தை பற்றி தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் , பெண்குயின் மற்றும் சைலன்ஸ் என மொக்கையான திரைப்படங்களாக வெளியிட்டு வந்த அமேசான் பிரைம் மேல்ல் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். அதை போக்கும் விதமாக இப்போது அமேசான் பிரைம் புத்தம் புது காலை என்ற சுமாரான படத்தை ரிலீஸ் செய்து ஆறுதல் அடைந்துள்ளது.

கொரோனா காரணமாக எத்தனையோ உயிர்கள் பலியான நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள்  ஆயிரக்கணக்கான கி மீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்டதை பற்றியோ எந்த வித அக்கறையும் இல்லாமல் பாசிட்டிவி எனும் கருத்தைக் கொண்டு எலைட் மனிதர்கள் எப்படி தங்கள் நாட்களை புத்தம் புதிதாக ஆரம்பிக்கிறார்கள் என சொல்வதே இந்த குறும்படங்களின் தொகுப்பு. இதில் கார்த்திக் சுப்பராஜின் மிராக்கிள் மட்டும் விதிவிலக்கு போன்ற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் இந்த படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை வைத்துள்ளார். டிவிட்டரில் ‘புத்தம் புதுக் காலை. ஆகக் கொடுமை. வாழ்த்துகள். தாங்க முடியலடா சாமி. கர்ப்பமுற்றால் ஸ்பேனிஷ் பாட்டு பாடுவோம். எங்களுக்கு ஸ்பேனிஷ் தெரியுமே. ஆகச் சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது. நீங்கள் தோல்வியுற்ற நெறிமுறைகளைப் பாருங்கள். தயவு செய்து ஒரு தலைமுறையைக் கொல்லாதீர்கள். இடம் கொடுங்கள், இடம் கிடைக்கும்’ எனக் கூறியுள்ளார்.

இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை சுதா கொங்கரா, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சுஹாசினி மணிர்த்னம் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய முன்னணி இயக்குனர்கள் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்