பூஜா ஹெக்டேவை அடுத்து நந்திதா ஸ்வேதாவுக்கும் கொரோனாவா?

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (18:18 IST)
பூஜா ஹெக்டேவை அடுத்து நந்திதா ஸ்வேதாவுக்கும் கொரோனாவா?
பிரபல தெலுங்கு நடிகையும் தமிழில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் நாயகியான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிரபல தமிழ் நடிகை நந்திதா ஸ்வேதாவுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ’தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அடுத்து தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார் இந்த டுவிட்டர் பொது வைரலாகி வருகிறது
 
சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நந்திதா தற்போது ஐபிசி 376, நெஞ்சம்மறப்பதில்லை, அக்ஷரா, கபடதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்