எதிர்மறையாக எழுதுவதால் என் குடும்பம் பாதிக்கிறது! – நாகர்ஜுனா வேதனை!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:10 IST)
நாகசைதன்யாவின் விவாகரத்து குறித்து பலரும் எதிர்மறையாக பேசி வருவது தன் குடும்பத்தை பாதிப்பதாக நாகர்ஜுனா வேதனை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு ஸ்டார் நடிகரான நாகர்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவிற்கும், நடிகை சமந்தாவிற்கு சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தில் நாகசைதன்யா – சமந்தா தம்பதியினர் தங்கள் விவாகரத்தை அறிவித்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என சமந்தா பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்து விவகாடம் குறித்து பேசியுள்ள நாகர்ஜுனா “ஊடகங்கள் என்னைப் பற்றி எதிர்மறையாக எழுதுவது எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அவற்றிற்கு எனது குடும்பம் பாதிப்பு, பலிகடாவாகும்போது கவலையாக உள்ளது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்