நொய்டா திரைப்பட விழாவில் விருதை குவித்த ஜெய்பீம்! – ரசிகர்கள் உற்சாகம்!

திங்கள், 24 ஜனவரி 2022 (11:47 IST)
சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்றுள்ளது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றது.

அதை தொடர்ந்து பல்வேறு விருதுகளிலும் பரிந்துரைக்கப்பட்டு வரும் ஜெய்பீம் ஆஸ்கர் விருது குழுவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் இடம்பெற்றது பெரும் வைரலானது. மேலும் நொய்டாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவிலும் ஜெய்பீம் தேர்வான நிலையில் தற்போது சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (லிஜோமோல் ஜோஸ்) ஆகியோருக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்