நானி, நஸ்ரியா நடிப்பில் வெளியான 'அடடே சுந்தரா’... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (09:09 IST)
நஸ்ரியா பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி தற்போது Ante Sundaraniki என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழில் அடடே சுந்தரா என பெயரிடப்பட்டு இந்த படம் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸானது. படம் வெளியாகி நல்ல வரவேற்புகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் ஜூலை 10 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகிறது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்