இயக்குனர் மிஷ்கின் தயாரிக்கும் புதிய படத்தை அவரது தம்பி ஆதித்யா தயாரிக்க இருக்கிறார்.
இயக்குனர் மிஷ்கின் கடைசியாக இயக்கி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து சில பிரச்சனைகள் காரணமாக விலகினார். அதையடுத்து அவர் வரிசையாக அருண் விஜய் மற்றும் சிம்பு ஆகியோரை வைத்து படம் இயக்க உள்ளார். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்போது புதிதாக பிதா என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். மிஷ்கினோடு இந்த படத்தை ஸ்ரீ கிரீன் சரவணன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்த படத்தில் மதியழகன் உடன் ராதாரவி, கலையரசன், அனு கீர்த்தி வாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.