தமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,978ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 61 பேர் உயிரிழந்தனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர், தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 66, 571 ஆகும்.