கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
அது குறித்து, முத்தையாவின் அடுத்தப் படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் விளக்கமளித்துள்ளது.
கார்த்தியின் படங்கள் தொடர் தோல்வி அடைந்து வந்தநிலையில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் அனைத்து சென்டர்களிலும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மருது படத்தை முத்தையா இயக்கினார். படம் கொம்பன் அளவுக்குப் போகவில்லை.
தற்போது ஸ்டுடியோ கிரீனுக்காக ஒரு கதை எழுதி வருகிறார் முத்தையா. அதில் சூர்யா நடிப்பதா தகவல். இது குறித்து விளக்கமளித்துள்ள ஸ்டுடியோ கிரீன், முத்தையா எங்கள் நிறுவனத்தில் படம் செய்ய கதை எழுதி வருகிறார். கதையை முடித்த பிறகே அதில் யார் நடிப்பது என்பது முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்