சற்குணம் படத்தில் நடிக்க ஒல்லியாகும் மாதவன்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (15:29 IST)
இறுதிச்சுற்று படத்துக்காக ஏற்றிய எடையை அதே யுஎஸ்ஸில் இறக்கிக் கொண்டிருக்கிறார் மாதவன்.


 
 
இறுதிச்சுற்றில் பாக்சர் வேடம் என்பதால் யுஎஸ் சென்று உடல் எடையை அதிகரித்ததுடன் உடம்பையும் முறுக்கி இரும்பாக்கினார் மாதவன். அடுத்து அவர் சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பெரும் பொருட் செலவில் வெளிநாடுகளில் தயாராகும் இந்தப் படத்துக்காக ஏற்றிய எடையை யுஎஸ்ஸில் குறைத்து வருகிறார்.
 
அத்துடன் சீனாவின் பாரம்பரிய தற்காப்பு கலையையும் அவர் பயின்று வருகிறார். சற்குணம் இயக்கும் படம் செப்டம்பரில் தொடங்குகிறது.
 
இந்தப் படத்துக்குப் பிறகே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மலையாள சார்லியின் தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிக்கிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்