முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு அப்பாவாகும் ராஜ்கிரண்
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (09:27 IST)
எஸ் 3 படம் முடிந்ததும் முத்தையா இயக்கத்தில் நடிப்பதென்று முடிவு செய்துள்ளார் சூர்யா. முத்தையாவும் கதையை தயார் செய்துள்ளார். வழக்கம் போல் கிராமத்து பின்னணியில் கதை தயாராகிறது.
முத்தையாவின் கொம்பன் படத்தில் கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் நடித்திருந்தார். அவரை தனது புதிய படத்திலும் கமிட் செய்துள்ளார் முத்தையா. இதில் அவர் சூர்யாவின் அப்பாவாக நடிக்க உள்ளார்.
நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசியுள்ளனர். எஸ் 3 படப்பிடிப்பு முடிந்ததும் முத்தையா இயக்கும் படம் தொடங்குகிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்