விஜய்யின் GOAT படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளன. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “டிராகன் –பிளாக்பஸ்டர்” என்று தெரிவித்துள்ளார். படம் ரிலீஸாவதற்கு முன்பே சிம்பு இப்படி பாராட்டி பேசியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.