ஓடிடியில் வெளியானது மோகன் லால் – ஜீத்து ஜோசப்பின் 12th மேன்!

Webdunia
சனி, 21 மே 2022 (09:30 IST)
மலையாள முன்னணி நடிகரான மோகன்லாலின் அடுத்த திரைப்படமான 12th மேன் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

மோகன்லால் & ஜூத்து ஜோசப் கூட்டணியில் இணைந்த திருஷ்யம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதையடுத்து வெளியான திருஷ்யம் 2 திரைப்படமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் அடுத்த திரைப்படமாக 12th மேன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்