யார் இந்த மிதுன் சக்ரவர்த்தி… முதல் முறை 100 கோடி ரூபாய் வசூல் செய்தது இவர் படம்தானா?

vinoth
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:26 IST)
கலை துறைக்காக மத்திய அரசு வழங்கும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு அவ்விருது பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி ஹிந்தி, பெங்காலி உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர். 80களில் அவர் நடித்த மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பல படங்கள், அவரது நடிப்பு மற்றும் நடனத்திற்காகவே வெற்றிப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. டிஸ்கோ நடனம் ஆடுவதில் மிதுன் சக்ரவர்த்தி தனிப்பாணியைக் கொண்டிருந்தார்.

இவர் நடித்த டிஸ்கோ டான்ஸர் என்ற படம் இந்திய சினிமாவில் ஒரு அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அது என்னவென்றால் முதல் முதலாக 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் இந்திய படம் அதுதான் என்பதுதான். இந்த படம் இந்தியாவில் 6 கோடி ரூபாயும், ரஷ்யாவில் சுமார் 94 கோடி ரூபாய் அளவுக்கும் வசூலித்து சாதனைப் படைத்தது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்