மித்ரன் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா? வெளியான தகவல்!

vinoth
புதன், 7 பிப்ரவரி 2024 (07:19 IST)
இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில அடுத்தடுத்து நடித்தார் தனுஷ். அதன் பிறகு காணாமல் போன மித்ரன் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு இயக்கிய திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இதையடுத்து மித்ரன் அடுத்து நடிகர் மாதவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்துக்காக மித்ரன் சொன்ன கதையில் திருப்தி அடையாத மாதவன், ஜெயமோகனின் கதையைப் படமாக்கலாம் என்று சொல்ல அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்துக்கு அதிர்ஷ்டசாலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க லண்டனில் நடக்கும் விதமாக இந்த படம் உருவாக உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்