டிரம்ப்பையும் விட்டு வைக்காத மிர்ச்சி சிவா: புகைப்படம் உள்ளே!

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (15:33 IST)
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தமிழ் 2. சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 
 
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சதீஷ், மனோபாலா, சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 
தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவாகியுள்ளது இந்த படம். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட், அரசியல் என அனைத்து தரப்பையும் கிண்டல் செய்துள்ளனர். 
 
தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் கிண்டல் செய்ததுள்ளனர். கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கை கட்டி சேரில் அமர்ந்திருக்க ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அவரை பார்க்கும் புகைப்படம் வைரலானது.
 
இதே போன்ற புகைப்படம் ஒன்று தமிழ் படம் 2 சார்பில் கிண்டல் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்....


தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்