ஓடிடி மத்திய அரசுக்குக் கூட கட்டுப்பட்டது இல்லை… அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (10:08 IST)
கொரோனா காரணமாக ஓடிடி தளங்களில் படங்கள் ரிலிஸாவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரை துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ “திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசிடமிருந்து முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும் மருத்துவ குழுவின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளோடு மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிலையாலும், மக்கள் அச்சமின்றி படம் பார்க்க வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் வரிசையாக படங்களை ஓடிடி தளங்களில் ரிலிஸ் செய்து வருகின்றனர். இதுபற்றி பேசியுள்ள செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ‘ஓடிடி என்பது மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசுக்கு கூட கட்டுப்பட்டது அல்ல.  திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம். இதுபற்றி திரைத்துறையினருடன் பேசி சரியான முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்