ரம்பையா...ஊர்வசியா...கண்ணகியா...நீ எதுக்கு வந்த? மீரா மிதுனை கழிவி ஊற்றிய நடிகர்!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (17:02 IST)
சமூக வலைத்தளங்களால்  பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் படமாக    "கருத்துக்களை பதிவு செய் " படம் உருவாகி வருகிறது. ராகுல்பரமகம்சா இயக்கும் இப்படத்தை RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.  எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் பாக்கியராஜ் கலந்துகொண்டு பேசியிருந்தார். அப்போது அந்த மேடையில் மீரா மிதுன் அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து பிரபல நடிகர் அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


 
அதாவது, பாக்யராஜ் சார் இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா சார் கூட ஏதோ ஒரு விசயம் பேசிட்டுக்காரு. ரெண்டு பேருக்கு நடுவில் உட்காந்திருந்த இந்தம்மா மீரா மிதுன்க்கு காலை கீழ போடத்தெரியாதா? மேடை ஏறுனதுல இருந்து கால்மேல காலை போட்டு உட்கார்ந்து இருக்குறது மீரா மிதுன் அவங்க மேனரிசமா இருக்கலாம். திரு. #பாக்யராஜ் சார் இந்தியாவின் தலை சிறந்த கதையாசிரியர்..நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பத்திரிகைஆசிரியர்... அதெல்லாம் விடுங்க... அவரு வயசு என்ன... அவரு தகுதி என்ன...இந்தம்மா மீராமிதுன்லாம அவரு வயது அனுபவத்துக்கு முன் .....தூசிக்கு சமம்... என்னா ஒரு அகம்பாவத்துல கால் மேல கால் போட்டு உட்காந்திருக்காங்க...என கடுமையாக விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்