Master திரைப்படம் NetflixIndia க்கு விற்கப்பட்டதா? இணையத்தில் வெளியான தகவல்

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:31 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில்,  இப்படம் அடுத்தாண்டு பொங்களுக்கு தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸில் விற்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆனால் மாஸ்டர் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்