’’அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்..’’பிரபல நடிகரை நேரில் சந்தித்த நடிகை!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:27 IST)
நடிகர் சுஷாந்தின் தற்கொலைக்குப் பின் பாலிவுட்டி வாரிசு நடிகர், நடிகைகள் மீது பெரும் குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த அவர், மும்பை அரசுக்கு எதிராகக் கருத்துகள் கூறி பல வழக்குகளைச் சந்தித்து வருகிறார்.
 

பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத், தற்போது ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவியில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில்,  நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சஞ்சய் சத் சினிமாப் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இவர் ஐதராபாத்திலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதே ஹோட்டலில் தங்கியிருந்த நடிகைகங்கனா அவரை  நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

மேலும் இதுகுறித்து கங்கனா கூறும்போது,’’ சஞ்சத் தத், அதே ஹோட்டலில் தங்கியிருப்பது தெரிந்து அவரைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தேன். அவர் இன்னும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். நீங்கள் நீண்ட கால வாழ நான் பிரார்த்திக்கிறேன் ’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்