’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை மிஸ் செய்துவிட்டேன்: ‘துணிவு’ நடிகை பேட்டி!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (12:04 IST)
’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை மிஸ் செய்துவிட்டேன்: ‘துணிவு’ நடிகை பேட்டி!
அஜித், மம்முட்டி நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படம் கடந்த 2000 ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் நடிக்க இயக்குனர் ராஜீவ் மேனன் முதலில் தன்னைத்தான் அணுகியதாக நடிகை மஞ்சுவாரியர் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய மஞ்சு வாரியார் ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில்  நடிக்க இயக்குனர் ராஜீவ் மேனன் முதலில் என்னைத்தான் அணுகினார் என்று தெரிவித்தார்
 
ஆனால் அப்போது மலையாள படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்ததால், அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் அந்த படத்தில் நான் நடித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
 
இந்த படத்தில் மட்டும் அவர் நடித்திதிருந்தால் 22 ஆண்டுகளுக்கு முன்பே அஜித் உடன் அவர் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்