மணிகண்டன் – விஜய் சேதுபதியின் அடுத்த படம் கைவிடப்படுகிறதா?

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (15:02 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு வெப் தொடர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் முருகேசன் என்ற வயதான தாத்தா நடித்திருந்தார். இந்த படம் பல விருதுகளை வென்றது. ஆனால் திரையரங்கில் இந்த படம் எதிர்பார்த்த அங்கீகாரத்தைப் பெறவில்லை.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படைப்புக்காக இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் இப்போது தொடங்காது என சொல்லப்படுகிறது. அதனால் அந்த படத்துக்கு ஒதுக்கிய தேதிகளை அப்படியே சுந்தர் சி இயக்கும் அரண்மனை 4 படத்துக்கு உடனடியாக ஒதுக்கியுள்ளாராம் விஜய் சேதுபதி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்