டீசர் மூலம் கவனம் ஈர்த்த ’குட்நைட்’ திரைப்படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (07:38 IST)
காதலும் கடந்து போகும், காலா மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். பன்முகத்திறமை கொண்டவரான இவர், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்போது குட்னைட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. தூங்கும்போது சத்தமாக குறட்டைவிட்டு அடுத்தவர்கள் தொந்தரவு செய்யும்  மோகன், என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடிக்க, அந்த பிரச்சனையால், அவர் தன்னுடைய காதலியை இழப்பது, அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என கலகலப்பாக சொல்லி செல்கிறது இந்த டீசர். இந்த டீசரும் ஒரு சிங்கிள் பாடலும் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்