முதல் நாள் வசூலே ரூ.8 கோடி? திரையரங்குகள், காட்சிகள் அதிகரிப்பு! – மாஸ் காட்டும் மாநாடு!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (15:46 IST)
பல்வேறு சிக்கல்களுக்கு இடையே திரையரங்குகளில் வெளியான மாநாடு முதல் நாளிலேயே 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. டைம் லூப் கான்செப்ட்டை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பல்வேறு சிக்கல்களால் படம் வெளியாவது கடைசி நேர இழுபறிக்கும் உள்ளான நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை வெளியிட்டார். நேற்று வெளியானது முதலாக பரவலாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மாநாடு. பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல திரையரங்குகள் மற்ற படங்களை விடுத்து மாநாடு படத்தை திரையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாநாடு வெளியான நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் நாள் வசூலில் இந்த ஆண்டில் வெளியான படங்களில் மாநாடு 5வது இடத்தை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்