குடும்ப அரசியல் செய்பவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம்- பிரதமர் மோடி

வெள்ளி, 26 நவம்பர் 2021 (14:58 IST)
இந்தியாவில் இன்று அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு விதிகளைக் கொண்ட தொகுப்பு மட்டுமல்லாமல், அது பெரும் பாரம்பரியம் கொண்டது.

இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசிய அரசியல் செய்கிறது. எனவே குடும்ப அரசியல் செய்யலாம் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என கூறினார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுக வாரிசு அரசியல் செய்கிறது எனவும், திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பாஜக தலைவரின் குற்றசாட்டிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில்,  நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்து வரும் பாஜக திமுகவை வாரிசு  அரசியல் செய்கிறது எனக் கூறத் தகுதியில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்