தல வழியில் மெகா ஸ்டார் மம்மூட்டி… வெளியான புகைப்படம்!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (11:38 IST)
லாக்டவுன் நாட்களில் நடிகர்கள் பலரு தங்கள் பண்ணை வீடுகளில் செடிகளை வளர்த்தல் ஆகியவற்றை பொழுதுபோக்காக செய்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக நடிகர் நடிகைகள் எல்லாம் ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அதுபோல இருப்பவர்கள் நேரத்தைக் கொல்ல புதுப் புது பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி வந்துள்ளனர். அந்த வகையில் நடிகர் அஜித் தனது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகள் மற்றும் மூலிகை செடிகளை வளர்த்துள்ளாராம். ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ட்ரோன் இயக்குதல் ஆகியவற்றை ஹாபியாக கொண்டவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியும் இப்போது அதுபோல தனது தோட்டத்தில் செடிகள் மற்றும் மரங்களை வைத்து வளர்த்து  வருகிறாராம். அது சம்மந்தமான புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்