ஹீரோ படத்தின் ரகளையான ஓப்பனிங் சாங் வீடியோ!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:53 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியான  திரைப்படம் ’ஹீரோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருந்தார். 
 
பாலிவுட் ஹீரோ அபாய் தியோல் வில்லன் ரோலில் நடித்திருந்தார்.  மேலும் நடிகர் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவிற்கு ஓடியது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருந்த  "மால்டோ கித்தாபுலே" என்ற செம்ம ரகளையான வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ பாடல்...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்