மேக்கப் மேன் என்னை அசிங்கமாக பேசி தாக்கினார்: நடிகை பிரயாகா மார்டின்!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (15:26 IST)
தமிழில் பிசாசு படம் மூலம் கதாநாயகி ஆனவர் பிரயாகா மார்டின். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

 
இந்நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் நடந்தவற்றை பற்றி கூறுகையில், சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நான்  செட்டுக்கு சென்றேன். படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன் என்பதால் மேக்கப் தேவையில்லை என்றார்கள். முகம் சோகமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனால் மேக்கப் மேனிடமும் சென்று டல்லாக மேக்கப்  போடுமாறு கூறினார்.
 
இந்நிலையில் மேக்கப் போட மேக்கப் மேனிடம் சென்றபோது அவர் என்னை கேவலமாக பார்த்ததோடு, அசிங்கமாகவும்  பேசினார். படப்பிடிப்பு தளத்தில் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், கவனிக்காதது போன்று இருந்தேன். பிறகு படப்பிடிப்பில் நடந்ததை என் அம்மாவிடம் கூறி வந்து கேட்டதற்கு மேக்கப் மேன் கண்டபடி திட்டினார். நான் மரியாதையாக பேசுமாறு  விரலை நீட்ட அவர் என்னை கையை முறுக்கி அடித்தார். ஆனால் நான் அவரை தாக்கியதாக ஃபேஸ்புக்கில் நண்பரின்  உதவியோடு போஸ்ட் போட்டுள்ளார்.
 
இதனால் என்னை தாக்கிய மேக்கப் மேன், ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது தனித்தனியாக போலீசில் புகார் அளிப்பேன் என்கிறார்  நடிகை பிரயாகா மார்டின்.
அடுத்த கட்டுரையில்