மகர சங்கராந்தி ஸ்பெஷல்! நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் புதிய படங்கள்!

J.Durai
செவ்வாய், 16 ஜனவரி 2024 (09:20 IST)
மகர சங்கராந்தி தினத்தையொட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 2024 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் மாஸ் தெலுங்கு படங்களின் ஸ்லாட்டை அறிவித்துள்ளது! 


 
இந்த வருடம் , 2024ல் திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு, 12 தெலுங்கு படங்கள் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான ஓடிடி உரிமம் பெற்ற 12 தெலுங்கு  படங்கள் குறித்து அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்தப் பின்னர், தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பின் மாயாஜாலத்தை தங்களின் வீடுகளில் வசதியாகப் பார்க்கலாம்.

நெட்ஃபிக்ஸ் தங்களின் சமூக ஊடக தளங்களில் இந்த 12 தலைப்புகளின் ஸ்னீக் பீக் மூலம் உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில்  2023ல் 'போலா ஷங்கர்', 'தசரா', 'ப்ரோ', 'மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி', 'மேட்' மற்றும் 'குஷி' போன்ற படங்களைப் பார்த்து ரசித்தனர். இப்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் படங்களுக்காக காத்திருக்கும் உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இப்போது இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

அல்லு அர்ஜுனின் பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா 2', ஜூனியர் என்டிஆரின் 'தேவரா' மற்றும் பிரபாஸின் 'சலார்' ஆகிய படங்கள் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவை.

இந்தப் படங்கள் தான் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகிறது.

ALSO READ: “இதெல்லாம் திரைத்துறைக்கே நல்லது கிடையாது..” இயக்குனர் வெற்றிமாறன் ஆதங்கம்!
 
நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் விபி, மோனிகா ஷெர்கில் இதுகுறித்து பகிர்ந்துகொண்டது “நெட்ஃபிலிக்ஸின் தென்னிந்திய பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் 50% ஆண்டு வளர்ச்சி தெலுங்கு திரைப்படங்களை வைத்துதான் இருக்கிறது.

இந்த ஆண்டு, தெலுங்கில் மாஸ் ஹீரோக்களுடைய பிளாக்பஸ்டர் படங்கள் மூலம்  உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த உள்ளோம்.

சிறந்த தெலுங்கு சினிமாவை இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்