விரைவில் வெளியாகிறது மகான் ஃபர்ஸ்ட் சிங்கிள்! – அசத்தல் அப்டேட்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (12:41 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் முதல் படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் துருவ் விக்ரமின் கேரக்டர் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் எதிர்வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்