நடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (12:36 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த 'இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ' படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். 
 
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நந்திதா ஸ்வேதா அதிர்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆம், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " 54 வயதான என் தந்தை திரு. சிவசாமி இன்று இறந்துவிட்டார் என்பதை என் நலம்விரும்பிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டு தன் தந்தையின் இறப்பு செய்தியை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்  இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்